அவள்: காதலில் சொதப்புவது எப்படி - படம் பார்த்தியாடா?
அவன்: இத படத்துல வேற போய் பார்க்கனுமா?
அவள்: $^%&%$#$#@#@#$@$#
----
இப்படித்தாங்க.. சாதாரணமா ஆரம்பிக்கிற ஒரு உரையாடல், ஒரு சாதிச்சண்டை அளவுக்கு டெவெலப் ஆகி, கடைசியில அவள் அவனைத் திட்ட, அவன் அவள்கிட்ட திட்டு வாங்க - இப்படி திட்ட திட்ட காதல் பண்றத, ரெண்டு மணி நேரம் ஜாலியா சொல்லி இருக்காங்க.
ஏற்கனவே வலை மக்களுக்கு குறும்படமா அறிமுகமான படம்தான். அதை அப்படியே மேக்சிமைஸ் செஞ்சி, பெரிய திரையில காட்டி இருக்காரு இயக்குனர். படத்தோட ஒளிப்பதிவு கோளாறா, இல்லை சாந்தி தியேட்டர் ப்ரொஜெக்டர் கோளாறானு தெரியல - தியேட்டர்லயே படம் திருட்டு விசிடி தரத்துலதான் இருந்தது. இருந்தும் படத்தோட நம்மள ஒட்ட வைக்கிறது என்னன்னு பார்த்தீங்கன்னா, பெவிகாலோ, சீட்ல ஒட்டியிருந்த பப்பிள்-கம்மோ இல்ல - காதல். அதவிட, காதலிக்க பசங்க செய்ற சொதப்பல்கள்.
அதுலயும், சித்தார்த்-அமலா பாலோட மெயின் காதல் கதைய விட, சித்தார்த் நண்பனா வர்ரவரோட சொதப்பல் செம கலக்கல். அதுதான் ஒரிஜினல் குறும்படத்தோட கதைன்னு நினைக்கிறேன் (நான் இன்னும் குறும்படத்த பார்க்கல!). "அவ உன்னத்தான்டா பார்க்குறா! லவ் பண்ணிடு மச்சி!" இப்படின்னு கூட இருந்தே ஏத்தி விடற நண்பர்களா நாம ஏணியா பார்ப்போம். ஆனா, அந்த ஏணி நம்மள எப்படி பார்க்கும்னா "மாப்ள! நீ கீழ இருந்துகிட்டு கீழ விழுந்த பெருசா அடி படாது. அதனால இந்த ஏணி வழியா மேல போய், அங்க இருந்து கீழ விழனும்! சரியா!?" -
கமிங் பேக் டூ மெயின் ஸ்டோரி - படத்துல ஹீரோ, ஹீரோயின தவிர்த்து நிறைய சுவாரசியமான கேரக்டர்களும் விஷயங்களும் இருக்குது. தமன்னா படத்தை Facebook ப்ரோபைல் போட்டோவா வச்சிருக்குற சித்தார்த் பாட்டி, அமலா பால் அப்பா- அம்மாவோட காதல் கதை (ஆமாங்க, படத்துல ஆடியன்ச தவிர மீதி எல்லாருமே காதல் பண்ணிட்டுதான் இருக்காங்க!), பாண்டிச்சேரி ட்ரிப் அப்புறம் முக்கியமா "இனிமே உண்மைதான் பேசுவேன்" அப்டின்னு காதலிகிட்ட சத்தியம் பண்ணிட்டு, இந்த டிரஸ் எப்படி இருக்குன்னு கேட்டவகிட்ட, "கேவலமா இருக்கு"ன்னு உண்மைய சொல்லி அடி வாங்குற காதலன் - இப்படி சொல்லிகிட்டே போகலாம்.
மொத்ததுல, ஒரு சுவாரசியமான படம்.
கடைசியா சொல்ற மெசேஜ் என்னன்னா - பசங்க எல்லாம் டிசி கரண்ட் மாதிரி - ஒரு நேரத்துல ஒரு விஷயத்த மட்டுமே யோசிச்சிட்டு அப்படியே நேரா போய்கிட்டே இருப்பாங்க. ஆனா, டிசி கரண்ட் வேலைக்காகாது. பொண்ணுங்க எல்லாம் ஏசி கரண்ட் மாதிரி. எப்பவுமே ஏசிக்கிட்டே இருக்குறதுனால இல்ல.. நிமிசத்துக்கு ஒண்ணா மாத்தி மாத்தி யோசிச்சு, அவங்களும் குழம்பி, பசங்களையும் குழப்புவாங்க. ஆனா, ஏசி கரன்ட்டுதான் வீட்டுக்குதவும். அதனாலதான் காலங்காலமா, வீட்டுல விளக்கேத்தனும்னா கல்யாணம் பண்ணிக்கோங்கறாங்க. இத புரிஞ்சிகிட்டாதன் லைப் safe. இல்லாட்டி off.
--
தினம் இரு திருக்குறள் - http://twikural.veerasundar.com/



